சிவயோக சுவாமிகளின் திருப்பள்ளியெழுச்சி

 

அன்னை தந்தையர் மைந்தர்கள் ஒருபால்

அருமைசேர் சோதரர் உறவினர் ஒருபால்

பொன்னணி சிறுமியர் சிறுவர்கள் ஒருபால்

புகழ்பவர் இகழ்பவர் போபவர் ஒருபால்

சென்னியிலஞ்சி கூப்பினர் ஒருபால்

தேசத்தில் திரிந்து இரப்பவர் ஒருபால்

கண்ணினை கண்டு களிக்கச் செய் பரனே

கடவுளே யென்னுள்ளம் எழுந்தருளாயே.

 

வேதமந் திரஞ் சொல்லும் வேதியர் ஒருபால்

வேள்விகள் செய்ய விழைபவர் ஒருபால்

பூதபௌ திகங்களை ஆய்பவர் ஒருபால்

புகைவண்டியமைக்கும் பொற்பினர் ஒருபால்

கீதத்தைப் பரவச் செய் யாழினர் ஒருபால்

கேட்டு மகிழ்ந்திருக்கும் கிழவர்கள் ஒருபால்

ஈதனைத்துஞ் செய்துஞ் செய்யாம லிருக்கும்

இறைவனே யென்னுள்ளம் எழுந்தருளாயே.

சிவ சிவ

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top